அமெரிக்கா : போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து.. விமானி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்துள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் பெர்ஸ்னோ நகரில் உள்ள லெமூர் கடற்படை விமான நிலையத்தில் இருந்து கடற்படைக்கு சொந்தமான 'எப்-ஏ-18இ சூப்பர் ஹார்னெட்' ரக போர் விமானம் ஒன்று வழக்கம் போல் ரோந்து பணிக்காக புறப்பட்டு சென்றுள்ளது.

இந்த விமானத்தில் ஒரு விமானி ஒருவர் மட்டுமே இருந்த நிலையில், இந்த விமானம் சான் பெர்னார்டினோ நகரில் உள்ள மொஜாவே பாலைவன பகுதிக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராதவிதமாக தரையில் விழுந்து நொறுங்கியது. 

இந்த கொடூர விபத்தில் விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில் இது குறித்து விரிவான விசாரணை நடத்த அமெரிக்க கடற்படை உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

USA Warplane crashes Pilot killed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->