பயிற்சிக்கு சென்ற மலையேறு வீரர்கள்.! பனிச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு..!  - Seithipunal
Seithipunal


உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காசி மாவட்டத்தில் நேரு மலையேறுதல் நிறுவனம் என்ற அரசு மலையேறுதல் கல்வி பயிற்சி நிறுவனம் உள்ளது.

இந்த பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த 34 பயிற்சி மலையேறு வீரர்கள் மற்றும் 7 பயிற்சியாளர்கள் என்று மொத்தம் 41 பேர் இன்று உத்தர்காசியில் உள்ள இமயமலையின் திரவுபதி கா கண்டா - 2 சிகரத்தில் இருந்து தங்களது பயிற்சியை முடித்துக்கொண்டு முகாமிற்கு திரும்பிக்கொண்டிருந்தனர். 

அப்போது, மலைச்சிகரத்தில் 16 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் மலையேற்ற வீரர்கள் அனைவரும் சிக்கிக்கொண்டனர். 

இதுகுறித்து தகவலறிந்த இந்தோ-தீபெத் எல்லைப்பாதுகாப்பு படையினர் மற்றும் தேசிய, மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் களமிறங்கினர்.

இதுபற்றி அதிகாரிகள் தெரிவித்ததாவது, "இந்த மீட்பு பணியின் போது பனிச்சரிவில் சிக்கியதில், 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 28 பேர் இன்னும் பனிச்சரிவில் சிக்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பனிச்சரிவில் சிக்கியதில் மீதமுள்ளவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

utrakant nehru Mountaineering education institute


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->