#BREAKING:: இத்தாலியில் ஆக்சிஜன் ஏற்றிச் சென்ற வாகனம் வெடித்து சிதறியது..!! - Seithipunal
Seithipunal


இத்தாலியில் மிலன் நகரில் ஆக்சிஜன் ஏற்றுச் சென்ற வாகனம் திடீரென வெடித்து சிதறியுள்ளது. இந்த வெடி விபத்தில் அருகில் இருந்த பல கார்கள் தீ பற்றி எரிந்துள்ளது. இந்த வெடி விபத்தானது மிலன் நகரின் மையப்பகுதியில் நடந்துள்ளது. இந்த வெடி விபத்தின் முதற்கட்ட தகவல்களின்படி ஆக்சிஜன்  வேன் வெடித்து சிதறியதில் நான்கு பேர் காயம் அடைந்ததற்காக தெரிய வந்துள்ளது. 

மிலன் நகரின் ஏற்பட்டுள்ள வெடி விபத்தின் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும் வெடி விபத்து நிகழ்ந்த இடம் முழுவதும் காவல்துறையால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. விபத்து நிகழ்ந்த இடத்திற்கு அருகில் உள்ள பள்ளி மற்றும் முதியோர் இல்லம் காலி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் மிலன் நகரம் முதுகு விழுவதும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vehicle carrying oxygen explodes in milan city Italy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->