வியட்நாம் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து - காப்பாற்ற முடியாத நிலையில் சிக்கி தவிக்கும் மக்கள்! - Seithipunal
Seithipunal


வியட்நாம், ஹனோயில் உள்ள 10 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

இந்த தீ விபத்தில் சுமார் 50 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 10 மாடி குடியிருப்பு கட்டிடத்தின் பார்க்கிங் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்து அதிவேகமாக கட்டிடம் முழுவதும் பரவத் தொடங்கியது. 

இது குறித்து அறிந்த மீட்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் 70-க்கும் மேற்பட்டவர்களை மீட்டனர். 

அவர்களின் 54 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் பலர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் மிக குறுகிய தெருவில் அமைந்துள்ளதால் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல முடியாததால் தீ வேகமாக பரவ தொடங்கியது. 

அருகில் இருந்தவர்களும் முடிந்த வரை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவினர். இருப்பினும் குறுகிய தெருவில் உள்ள கட்டிடம் என்பதால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் உயிர் பலி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vietnam apartment building Terrible fire accident


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->