கால்பந்தாட்ட தோல்வியின் எதிரொலி..!! பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வன்முறை வெடித்தது..!! - Seithipunal
Seithipunal


கத்தாரில் நடைபெற்ற 22வது சீசன் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி அர்ஜென்டினாவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை அர்ஜென்டினா உட்பட உலகம் முழுவதும் உள்ள கால்பந்தாட்ட ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் இறுதியை ஆட்டத்தில் பிரான்ஸ் அணி தோல்வி அடைந்த காரணத்தால் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கால்பந்தாட்ட ரசிகர்கள் குவிந்தனர். இதனைத் தொடர்ந்து பாரிஸ் நகரில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையின் போது பல வாகனங்களுக்கு தீ வைத்தனர். போராட்டக்காரர்கள் போலீசார் உடன் மோதலில் ஈடுபட்டதால் கண்ணீர் புகை குண்டு வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். இதன் காரணமாக பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பதட்டமான சூழல் உண்டாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Violence broke out in Paris after football defeat


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->