ஆட்குறைப்பில் இறங்கிய வோடபோன் நிறுவனம் - அச்சத்தில் ஊழியர்கள்.!!
vodafone company announce eleven thousand employees dismiss
ஆட்குறைப்பில் இறங்கிய வோடபோன் நிறுவனம் - அச்சத்தில் ஊழியர்கள்.!!
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கொரோனா தொற்று மற்றும் உக்ரைன்-ரஷியா போரின் விளைவாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இந்த பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் உலகநாடுகள் பெரும் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த பொருளாதார நெருக்கடியால் பன்னாட்டு நிறுவனங்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். இந்த பொருளாதார நெருக்கடியை சரி செய்யும் விதமாக பன்னாட்டு நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்து வருகின்றன.
முதலில், ட்விட்டர், அமேசான், டிஸ்னி, முகநூல் என்று பல பன்னாட்டு நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டனர். இந்த ஆட்குறைப்பினால், பல நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஒரு வித அச்சத்திலேயே இருந்து வந்தனர்.
இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல தொலைதொடர்பு நிறுவனமான வோடபோன் பதினோராயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அந்த நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியான மார்கெரிட்டா டெல்லா வால்லே வெளியிட்டுள்ளார்.
English Summary
vodafone company announce eleven thousand employees dismiss