பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பிடிவாரண்ட்.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சித் தலைவர் மான இம்ரான் கான் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போதைய எந்த வழக்குகளின் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

இதனிடையே பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். இதில் அவர் மீது ஊழல், தேச துரோகம், பயங்கரவாதம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இதனிடையே கடந்த மாதம் இம்ரான் கான் நீதிமன்றத்துக்கு வந்த போது அவரை துணை இராணுவம் கைது செய்தது. அதன் காரணமாக நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். மேலும் கலவரத்தை துண்டிதாக இம்ரான் கான் மீது பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டியது. 

இந்த நிலையில் நேற்று இம்ரான் கான் உள்ளிட்ட அவரது கட்சி தலைவர்களுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து லாகூரில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நீதிமன்றம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

மேலும் இந்த வழக்கில் முன்னாள் விமான போக்குவரத்துறை அமைச்சர் குலாம் சர்வாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பதை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

warrant for Pakistan's former Prime Minister Imran Khan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->