2ஆம் உலகப் போரின் அணுகுண்டு தாக்குதலை குறிப்பிட்டு பேசிய அதிபர் புடின்.! அச்சத்தில் மேற்கத்திய நாடுகள்.!
Western countries in fear as Putin mention 2nd world war nuclear attack
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான போர் 8 மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், இரண்டாம் கட்ட தாக்குதலை ரஷ்யா தீவிரமாக நடத்தி வருகிறது. மேலும் முக்கிய நகரங்களில் ட்ரோன்கள் மூலம் ஏவுகணைகளால் தாக்குதல் நடத்தி வருகிறது.
அணு ஆயுதப் போர் ஏற்பட்டால் இரு நாடுகளுக்கும் வெற்றி கிடைக்காது என்று சில நாட்களுக்கு முன்பு ரஷ்யா அதிபர் புதின் கருத்து தெரிவித்திருந்தார். மேலும் உக்ரைனின் டினிப்ரோ ஆற்றின் மேற்குக் கரையிலிருந்து ரஷ்ய படைகள் பின்வாங்க போவதாக ரஷ்யா உறுதி அளித்தது.
இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் நடத்திய உரையாடலின் போது ரஷ்ய அதிபர் புடின், ஒரு போரில் வெற்றி பெற வேண்டுமென்றால் பெரிய நகரங்களை தாக்க அவசியமில்லை என்றும், 2ஆம் உலகப் போரில் ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான அணுகுண்டு தாக்குதல் இதற்கு சிறந்த உதாரணம் என்று தெரிவித்துள்ளதாக தி டெய்லி மெயில் தகவல் வெளியிட்டுள்ளது.
இரண்டாம் உலகப்போரில் நடந்த அணுகுண்டு தொடர்பாக அதிபர் புதின் கூறியிருப்பது, மேற்கத்திய நாடுகளில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Western countries in fear as Putin mention 2nd world war nuclear attack