குரங்கு அம்மை நோய் பரவல்: சர்வதேச சுகாதார அவசரநிலை அறிவிப்பு.!
WHO declares international emergency due to monkey pox spread
கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பரவ தொடங்கிய குரங்கு அம்மை, கடந்த ஒரு மாதமாக உலக நாடுகளில் நோய் பரவல் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் நோய் பரவல் எண்ணிக்கை சில நாடுகளில் அதிகரித்து காணப்படுகிறது.
மேலும் குரங்கு அம்மை நோய் ஒரு சர்வதேச பொது சுகாதார அச்சுறுத்தலாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் குரங்கு அம்மை நோய் தொற்று அதிகரித்து வருவது தொடர்பாக அவசரக் குழுவின் மூன்றாவது கூட்டம் காணொளி மூலம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அவசர குழுவின் 11 பேர் உறுப்பினர்களும், ஆலோசகர்கள் 6 பேர் பங்கேற்றனர். இதையடுத்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் பேசும் பொழுது , உலக நாடுகளில் குரங்கு அம்மை நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஒரு சில நாடுகளில் நோய் பரவல் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்றும், அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இதுவரை 100க்கும் மேற்பட்ட நாடுகளில், 70000 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
English Summary
WHO declares international emergency due to monkey pox spread