இந்தியாவில் பரவியுள்ள உருமாறிய B 1617 கொரோனா பரவல் கவலையளிக்கிறது - உலக சுகாதார அமைப்பு.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், நாளொன்றுக்கு 3.50 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். கடந்த காலத்தில் மேலை நாடுகள் அனுபவித்த துன்பத்தை, தற்போது இந்தியா அனுபவித்து வருகிறது. 

மேலை நாடுகளுக்கு கடந்த காலங்களில் அவசர தேவையை கருத்தில் கொண்டு இந்தியா உதவிக்கரம் நீட்டி செய்து வந்த நிலையில், தற்போது இந்தியாவிற்கு பல உலக நாடுகள் கைகொடுத்து உதவி செய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களை பொறுத்த வரையில் இந்தியாவின் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், கொரோனா பரவல் அதிகரித்திருந்த பல மாநிலங்களில் கொரோனா குறைந்து வருகிறது.

ஆனால், கொரோனாவின் பரவல் முதலில் குறைந்திருந்த பல மாநிலங்களும் உச்சகட்ட கொரோனா பரவலை எதிர்கொள்ள இயலாமல் திகைத்து வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் ஹாட்ஸ்பாட்டாக கருதப்பட்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் முழு ஊரடங்கு பலனளித்து கொரோனா குறைந்து வரும் நிலையில், கர்நாடக மாநிலத்தில் கொரோனா அதிகரித்து அம்மாநிலம் மகாராஷ்டிரா மாநிலத்தை முந்தி சென்றுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மே மாதம் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பக்குழு தலைவர் மருத்துவர் மரியா வான் கேர்க்கோவ் (Maria Van Kerkhove) செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " இந்தியாவில் தான் உருமாறிய பி 1617 ரக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸின் பரவல் வேகம் கவலையை அளிக்கிறது. 

உலக சுகாதார அமைப்பின் நோய்தொற்று தடுப்பு குழு மற்றும் ஆய்வக குழுவினர் இணைந்து உருமாறிய கொரோனா வைரஸின் பரிமாணம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டோம். பிற நாடுகளிலும் இந்த வைரஸ் தொற்று தொடர்பாக ஆராய்ச்சி நடந்து வருகிறது. இந்த வைரஸ் கண்டறியப்பட்டதும் பரவல் வேகம் அதிகரிக்கும் என முன்னதாகவே ஆய்வு முடிவுகள் கூறியது. இந்த வைரஸ் தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. முடிவுகள் வந்ததும் தகவல் தெரியப்படுத்தப்படும். 

உருமாற்றம் அடையும் புதிய வைரஸ்கள் பரவுமா? எனவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பரவலை குறைத்து, உயிரிழப்பை தடுக்க வேண்டும் என்பதே அவசியம் ஆகும். வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை உறுதியாக அதிகப்படுத்த வேண்டும். சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், வீட்டிலேயே பணிகளை செய்தல் போன்றவை முக்கியம் " என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WHO Dr Maria Van Kerkhove Sad about India Corona Virus B 1617 Variant Outbreak


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->