இலங்கையின் புதிய பிரதமர் யார்?...இதோ ஆளும் கட்சி எடுத்த அதிரடி முடிவு! - Seithipunal
Seithipunal


இலங்கையின் புதிய அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த செப்டம்பர் மாதம் 21-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளா் அனுரகுமார திசாநாயக வெற்றி பெற்று தற்போது அதிபராக விளங்கி வருகிறார்.

இந்த நிலையில், இலங்கையின் 17-வது நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி வேட்பாளரே வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அந்த கதையில்  225 இடங்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் 159 இடங்களை கைப்பற்றி தேசிய மக்கள் சக்தி கூட்டணி வெற்றிப் பெற்றுள்ளது.மேலும், 3-ல் இரண்டு பங்கு இடங்களை கைப்பற்றி  தேசிய மக்கள் சக்தி வரலாற்று சாதனையும் படைத்துள்ளது.


இந்த நிலையில், இலங்கை அதிபர் திசநாயகா அந்த நாட்டின்  புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையை நாளை  நியமிப்பார் என்று தேசிய மக்கள் சக்தி கூட்டணி அறிவித்துள்ளது. தொடர்ந்து அங்கு  புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Who is the new prime minister of sri lanka here is the decision taken by the ruling party


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->