உலக அளவில் அதிகரிக்க தொடங்கும் குரங்கு அம்மைத் தொற்று! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


குரங்கு அம்மை தொற்று உலக அளவில் அதிகரித்து வரும் நிலையில் உலக சுகாதார அமைப்பு அனைத்து நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குரங்கு அம்மை என்பது சின்னம்மை போன்று அரிதாக, மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படும் ஒரு வகை வைரஸ் தொற்று நோய்.

இந்நோய் சின்னம்மை விட தாக்கம் குறைவாக இருந்தாலும் மிகுந்த ஆபத்தான ஒரு தொற்றுநோய்.

உடல் முழுவதும் ஏற்படும் கொப்பளங்கள், காய்ச்சல், தலைவலி போன்றவை குரங்கு அம்மையின் அறிகுறிகளாகும். மேலும் சுவாச குழாய் மூலமும், கண், காது, மூக்கு உள்ளிட்ட பகுதிகள் உள்ள மியூகோஸ் திசுக்கள் மூலமாகவும் இந்த வைரஸ் வேகமாக பரவ கூடும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கம் உலகம் முழுவதும் இருந்த நிலையில், தற்போது குரங்கு அம்மைத் தொற்று கனடா ,பிரிட்டன் ஜெர்மனி, ஸ்பெயின், ஆஸ்திரேலியா, பெல்ஜியம் போன்ற நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளதால் உலக சுகாதார மையம் உலக நாடுகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

மேலும் பிரிட்டனில் குரங்கு அம்மை தொற்று அதிகரித்து வரும் நிலையில் அந்த நாடு தடுப்பு மருந்து செலுத்த முடிவெடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WHO issues warning over monkey fox virus


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->