அமெரிக்காவை ஆளப்போவது யார்?...தொடர் முன்னிலையில் டிரம்ப்!...முன்னேறுவாரா கமலா ஹாரிஸ்? - Seithipunal
Seithipunal


உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று காலை நிறைவு பெற்றது. இந்த தேர்தலில், ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிசும், குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டிரம்பும் களம் கண்டனர்.

அங்கு ஒட்டு மொத்தமாக 16 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், 7 கோடிக்கும் அதிகமானோர் முன்கூட்டியே தங்கள் வாக்கினை செலுத்தி உள்ளனர்.

மேலும் , கமலா ஹாரிஸ் இ-மெயில் மூலம் தனது வாக்கினை செலுத்தி உள்ளார். நேற்று தனது மனைவியுடன் வாக்கினை செலுத்திய டிரம்ப், தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால் வன்முறையில் ஈடுபட போவதில்லை என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் நேற்று தொடங்கிய வாக்குப்பதிவு இன்று காலை வரை நடைபெற்று வருகிறது. பெரும்பாலான  மாகாணங்களில் வாக்குப்பதிவு நிறைவு அடைந்த நிலையில், தற்போது வாக்குப்பதிவு எண்ணப்பட்டு வருகிறது.

டொனால்டு டிரம்ப் 178 எலக்டோரல் வாக்குகளை பெற்று முன்னிலை வகித்து வருகிறார். மேலும், கமலா ஹாரிஸ் 99 எலக்டோரல் வாக்குகளை தற்போது பெற்றுள்ளார். மொத்தமுள்ள 538 எலக்டோரல் வாக்குகளில் வெற்றிக்கு 270 வாக்குகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Who will rule the united states trump in the lead will kamala harris advance


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->