உலக நாடுகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வடகொரியாவின் அறிவிப்பு.! என் சீனா நாட்டு தோழர்களே...
Winter Olympics China North Korea
வருகின்ற பிப்ரவரி மாதம் நான்காம் தேதி முதல் 20ம் தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீன நாட்டின் தலைநகர் பீஜிங்கில் நடக்கவுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தல் இருந்தபோதிலும், இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில், சீனாவில் நடக்கவுள்ள இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், வட கொரியா பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளது. சீனாவின் நெருங்கிய நட்பு நாடான வடகொரியா இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருப்பது உலக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து, வட கொரியா நாட்டின் ஒலிம்பிக் கமிட்டி மற்றும் விளையாட்டு அமைச்சகம், சீன நாட்டின் ஒலிம்பிக் கமிட்டிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
"வடகொரியாவுக்கு எதிராக விரோத சக்திகளின் நகர்வுக்கு உலகளாவிய தொற்றுநோய் காரணமாக, நாங்கள் இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியவில்லை. அதே சமயத்தில் இந்த குளிர்கால ஒலிம்பிக் திருவிழாவின், சீன நாட்டின் தோழர்களின் அனைத்து பணிகளையும் நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்" என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள், பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை தூதரக ரீதியில் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. அதே சமயத்தில் அரசு அதிகாரிகளை அனுப்பாமல், விளையாட்டு வீரர்களை மட்டும் அனுப்ப உள்ளதாகவும் அந்த நாடுகள் அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Winter Olympics China North Korea