விஷ மீன் சாப்பிட்டு மனைவி உயிரிழப்பு.!! கோமா நிலையில் கணவர்.! - Seithipunal
Seithipunal


விஷ மீன் சாப்பிட்டு மனைவி உயிரிழப்பு.!! கோமா நிலையில் கணவர்.!

ஜப்பான் நாட்டில் உள்ள கடலில் அதிகளவில் பபர் என்ற மீன் காணப்படும். இந்த மீன், அதிகம் நச்சுத்தன்மை கொண்டது ஆ கும். இந்த மீனில் உள்ள நச்சு தாக்கினால் அடுத்த இருபத்து நான்கு மணி நேரத்திற்குள் உயிரிழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. 

இருப்பினும், இந்த மீன் ஜப்பானில் பிரபல உணவாக இருந்து வருகிறது. ஆனால், இதனை முறையாக பயிற்சி பெற்ற சமையல்காரர்களால் மட்டுமே அந்த மீனின் விஷத்தன்மையை அகற்றிவிட்டு சமைக்க முடியும். 

இதனை சாதாரணமாக மற்ற மீன்களை போல் வீட்டில் சமைத்து சாப்பிட முடியாது. இந்நிலையில் மலேசியா நாட்டில் முதியவர் ஒருவர் கடந்த வாரம் பபர் மீனின் விஷத்தன்மை குறித்து அறியாமல் அதனை சமையலுக்கு வாங்கி வந்துள்ளார்.

அந்த மீனை அவரது மனைவி சமைத்துள்ளார். அதன் பின்னர் இரண்டு பேரும் அதை சாப்பிட்டுள்ளனர். ஆனால், சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து இரண்டு அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், மூதாட்டி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். முதியவர் கோமா நிலைக்கு சென்றுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman died and husband homa stage for eat puffer fish


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->