ஓடும் டாக்ஸியில் குழந்தை பெற்றெடுத்த பெண்... எக்ஸ்ட்ரா வாடகை செலுத்த நோட்டீஸ் அனுப்பிய கொடூரம்.! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து லண்டனை சேர்ந்த பாரா காகனிண்டின் என்ற 26 வயது பெண் நிறைமாத கர்ப்பிணியாக நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று பாரா வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக பக்கிங்ஹாம்ஷையரில் உள்ள கால்டாக்சி ஒன்றில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார். 

அப்பொழுது கார் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் சென்றுகொண்டிருந்தபோது பாராவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால், காரிலேயே அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதையடுத்து கார் மருத்துவமனைக்கு சென்றடைந்ததும், அங்கு டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் தாயையும், சேயையும் மீட்டு சிகிச்சை அளித்தனர். 

தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர். இந்நிலையில் ஓடும் காரில் குழந்தை பெற்றெடுத்தபோது காரில் ஏற்பட்ட அசுத்தத்தை காரணம் காட்டி பாராவுக்கு வாடகை கார் நிறுவனம், அசுத்தத்தை சுத்தம் செய்ய எக்ஸ்ட்ரா 60 பவுண்டு (சுமார் ரூ.5,700) செலுத்த வேண்டுமென கார் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman gives birth to taxi get bill in england


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->