அதிகம் பொய் சொல்வது பெண்களா ? வாங்க பார்க்கலாம்.!
women lie more time
இந்த உலகில் மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் பொய் சொல்வது இயல்புதான். அவ்வாறு பொய் சொல்பவர்களில் 'பெண்கள் எந்த அளவுக்கு பொய் சொல்வார்கள்?' என்பதைக் கண்டறிவதற்கு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மனோதத்துவ ஆய்வாளர் மேரி கோல்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டார். நாம் அனைவரும் சிறுவயதில் இருந்தே பொய் சொல்ல ஆரம்பித்து விடுகிறோம்.
முதலில் நாம் செய்யும் தவறை மறைப்பதற்கு பொய் சொல்கிறோம். பின்னர் ஒருவரிடமிருந்து தப்பிப்பதற்கு பொய் சொல்கிறோம். இப்படி நம் வாழ்வில் ஏதாவது ஒரு பொய்யை சொல்லிக்கொண்டு தான் இருக்கிறோம்.
அப்படி பெண்களில் இளம் தலைமுறையினரை விட திருமணமான பெண்கள் தான் அதிகம் பொய் சொல்கிறார்கள். அதற்கு காரணம் அவர்கள் குடும்பத்தை எடுத்து நடத்தும் அளவிற்கு முன்னேறி உள்ளனர். அப்போது அவர்களுக்கேத்த தெரியாமல் ஏதாவது ஒரு தவறு நடந்து விடுகிறது. இதனை மறைப்பதற்காக பொய்களை சொல்கிறார்கள்.
பெண்கள் பொய்களை சொல்வதற்கு கணவர் மீதான ஒரு வித பயமும் காரணமாக உள்ளது. ஒரு சில பெண்கள் கணவர் மீதான வெறுப்பாலும் உண்மையை மறைத்து பொய் பேசுகிறார்கள். ஒரு சில வஞ்சகமும், சூதும் கலந்து பொய் சொல்வார்கள். இந்த பெண்களால் தான் குடும்பத்தில் மிகப்பெரிய குழப்பங்கள் ஏற்படும். அப்படிப்பட்ட பெண்களிடம் தான் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும்.
பெண்கள் எந்தெந்த வகைகளில் பொய் சொல்வார்கள் தெரியுமா? முதலில் "பெண்கள் காய்கறி வெட்டும்போது கையில் லேசாக கீறியிருக்கும். அது குறித்து கணவர் கேட்டால், அவருக்கு கவலையை ஏற்படுத்தி அதன் அழகை ரசிக்கும் வகையில் மானே தேனே என்று கதையை சொல்வார்கள். ஒரு சிலர் தனது கணவர் கஷ்ட படக்கூடாது என்று நினைத்து பெரிய காயத்தைகூட 'அதெல்லாம் ஒண்ணுமில்லேங்க.. கையில் லேசான காயம் தான்' என்று பூசி முழுகுவார்கள்.
இதையடுத்து கணவர் மனைவியிடம் வரவு செலவு குறித்து கேட்டால் பூனை போல் அமைதியாக பம்மி செல்வார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கணவர் என்னுடைய சட்டை எங்கே?' என்று கேட்டால், 'அதை நான் பார்த்து ஒரு வாரம் ஆகிறது' என்று ஒருவிதமான பொய்யைச் சொல்வார்கள். இப்படி பெண்கள், தங்களுடைய குடும்ப மகிழ்ச்சிக்காகவும், கணவன்- மனைவிக்கு இடையே உள்ள உறவை வலுப்படுத்துவதற்காகவுமே நிறைய பொய்களை சொல்கிறார்கள். அதனால் குடும்பத்திற்கு எந்த பாதிப்பும் வருவதில்லை என்று ஆராய்ச்சியின் மூலம் தெரிவித்துள்ளார்