எலான் மஸ்கிடம் வேலை பார்ப்பது இதயத்துக்கு நல்லதல்ல - டெஸ்லா துணை தலைவர் ஸ்ரீலா வெங்கடரத்னம்! - Seithipunal
Seithipunal


சமூக வலைதளத்தில் டெஸ்லா நிறுவனத்தின் துணைத்தலைவர் ஸ்ரீலா வெங்கடரத்னம் அந்நிறுவனத்தில் இருந்து வேலை பார்ப்பது இதயத்திற்கு நல்லதல்ல என பதிவிட்டுள்ளார்.

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்சின் சி.இ.ஓ.வாக உள்ளார். உலக அளவில் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் டெஸ்லா நிறுவனம் முன்னிலையில் உள்ளது.

டெஸ்லா கார் உற்பத்தி நிறுவனத்தின் துணை தலைவராக இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீலா வெங்கடரத்னம், கடந்த 10 ஆண்டுக்கு மேலாக அங்கு பணிபுரிந்து வருகிறார். இவரது வருகைக்கு பின் ஆண்டு வருமானம் கணிசமாக உயர்ந்தது.

இந்த நிலையில் , சமூக வலைதளத்தில் டெஸ்லா நிறுவனத்தின் துணை தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன் என ஸ்ரீலா வெங்கடரத்னம் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, டெஸ்லா நிறுவனத்தில் பணிபுரிவதை ஆரம்பத்தில் பெருமையாகக் கருதினேன். ஆனால் எலான் மஸ்கிடம் வேலை செய்வது இதயத்துக்கு நல்லதல்ல. மயக்கம் வரும் அளவுக்கு அங்கு பிரஷர் ஏற்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சமீப காலமாக டெஸ்லா நிறுவனத்தில் இருந்து உயர் பதவியில் உள்ளோர் விலகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Working for Elon Musk is not good for the heart Tesla Vice President Srila Venkataratnam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->