800 கோடியை எட்டிய உலக மக்கள்தொகை.. சீனாவை, இந்தியா மிஞ்சும் என எதிர்பார்ப்பு.!
World population near 800 cr
2023 ஆம் ஆண்டுகுள் உலக மக்கள் தொகை எண்ணிக்கையில் நாம் சீனாவை மிஞ்சி விடுவோம் என்று ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11ஆம் தேதி உலக மக்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது . கடந்த 1987 ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி கணக்கீட்டின்படி உலக மக்கள் தொகை 500 கோடியாக அதிகரித்தது. மக்கள் தொகை அதிகரிப்பால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐநா இதை கடைப்பிடித்து வந்தது.
1990 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 90 நாடுகளில் உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்பட்டது. அதன் பிறகு உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. நவம்பர் 2021 புள்ளி விவரம் படி மொத்த மக்கள் தொகை எண்ணிக்கை 790 கோடியாக உள்ளது.
கடந்த சில நூற்றாண்டாக மக்கள் தொகை எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி இந்தியாவில் மக்கள் தொகை 141.2 கோடியாக உள்ளது. சீனாவில் மக்கள் தொகை 142.6 கோடியாக உள்ளது. அடுத்த ஆண்டு கட்டாயம் சீனாவை இந்தியா முந்தும் என்று தெரிவித்துள்ளது.
2050 ஆம் ஆண்டு இந்தியாவின் மக்கள் தொகை 166 கோடியாக இருக்கும், அப்போது சீனாவின் மக்கள் தொகை 131 கோடியாக இருக்கும் என கணித்துள்ளது. தற்போது சிசு மரணம், குழந்தை இறப்பு விகிதம் குறைந்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
World population near 800 cr