உலகின் முதல் ஓட்டுநர் இல்லாத பேருந்து சேவை... அடுத்த வாரம் தொடக்கம்... எங்கு தெரியுமா.? - Seithipunal
Seithipunal


ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்தில் உலகின் முதல் ஓட்டுநர் இல்லாத பயணிகள் பேருந்து சேவை அடுத்த வாரம் திங்கள் கிழமை முதல் எடின்பரோவிலிருந்து இயக்கப்படவுள்ளன. மேலும் 14 மைல் தூர சுற்றளவில் செல்லும் இந்த பேருந்துகள் வாரத்திற்கு சுமார் 10,000 பயணிகளை ஏற்றிச் செல்லும் என பேருந்து நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பேருந்து நிர்வாக அதிகாரிகள் வெளியிட்ட தகவலில், தானியங்கி பேருந்துகள் இயக்கப்படுவது இதுவே முதல்முறை என்றும், சுமார் 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் இந்த பேருந்துகளில் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய சென்சார்களுடன் இயக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து முழுவதும் தன்னிச்சையாக செயல்படும் பேருந்துகளுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில், பேருந்தில் பாதுகாப்பு ஓட்டுநர் ஒருவர் பணியமறுத்தப்படுவார் என்றும், அவசரநிலைகளின் போது பேருந்தை இயக்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தச் சேவை பாதுகாப்பானதாகவும், அதிக எரிபொருள் சிக்கனமானதாகவும், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை அளிக்கும் என்றும் பேருந்து சேவையின் கொள்கை இயக்குநர் பீட்டர் ஸ்டீவன்ஸ் தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Worlds first autonomous bus launched in Scotland


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->