அமெரிக்க பெண் எம்.பி மீது தாக்குதல் நடத்திய இளைஞர்.! காபியை வைத்து உயிர் பிழைத்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா நாட்டில் ஜோ பைடன் தலைமையில் ஜனநாயக கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்தக் கட்சியில் பெண் எம்.பியாக இருப்பவர் ஆங்கி கிரேக். இவர் நேற்று முன்தினம் வாஷிங்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் லிஃப்டில் சென்றார். 

அப்போது, திடீரென உள்ளே நுழைந்த இளைஞர் ஒருவர் கிரேக்கை சரமாரியாகத் தாக்க ஆரம்பித்தார். இதையடுத்து, கிரேக் அந்த இளைஞரிடம் இருந்து தப்பிப்பதற்காக தான் வைத்திருந்த சூடான காபியை அந்த வாலிபர் முகத்தில் ஊற்றியுள்ளார். 

இதில், சூடு தாங்காமல் வலியில் துடித்த அந்த இளைஞர் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். இதனால், லேசான காயங்களுடன் தப்பித்த கிரேக் இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார். 

அந்த புகாரின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் படி, கிரேக் மீது தாக்குதல் நடத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர். 

இந்த நிலையில், தாக்குதல் சம்பவம் குறித்து ஆங்கி கிரேக் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், 'காலை நேரத்து காபி என்னை காப்பாற்றியது. நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று கூறுவேன். எனக்கு அதிக காயம் ஏற்படவில்லை' என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth attack female mp Angie Craig in vasington


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->