ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பிடம் அண்ணாமலை சொன்னது இதுதான்! பரபரப்பு தகவல்!
ADMK OPS EPS Erode By Election BJP Stand info
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக (எடப்பாடி பழனிசாமி) போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. அதிமுகவிற்கு முழு ஆதரவையும் தெரிவிப்பதாக அளிப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
மேலும், இந்த இடைத்தேர்தலில் ஓ பன்னீர்செல்வம் அணியினரும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். ஒருவேளை பாஜக இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டால், அதற்கு தாங்கள் ஆதரவளிப்போம் என்று ஓபிஎஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், பாஜகவின் தலைமையகமான கமலாலயத்தில் அண்ணாமலையை ஓபிஎஸ் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இதேபோல் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த மூத்த நிர்வாகிகளும் அண்ணாமலையை நேரில் சந்தித்து, அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
வெளியான இந்த தகவலின் படி, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இரண்டு தரப்பினரிடம் பாஜக தரப்பில், 'இந்த விவகாரத்தில் பாஜகவின் தேசிய தலைமை தான் முடிவு எடுக்க முடிவெடுக்கும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பின் கோரிக்கைகளை தேசிய தலைமைக்கு அனுப்பி வைப்பதாகவும் அண்ணாமலை அவர்களிடம் கூறியுள்ளதாக அந்த பரபரப்பு தகவல் தெரிவிக்கின்றது.
English Summary
ADMK OPS EPS Erode By Election BJP Stand info