உங்க பதவியின் மரியாதையை காப்பாத்திக்கங்க - எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் பதிலடி! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி குடியரசு தின விழா அணிவகுப்பில் இடம்பெறாதது, திமுக அரசின் நிர்வாக திறனற்ற நிலை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து இருந்தார்.

இந்நிலையில், இதற்க்கு அமைச்சர் சாமிநாதன் கண்டனம் தெரிவித்து அளித்துள்ள விளக்கத்தில், "குடியரசு தின அணிவகுப்பு ஊர்திகள் சுழற்சி முறையில் அனுமதிக்கப்படுகின்றன.  

ஒரு மாநிலத்தின் ஊர்திகள் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பங்கேற்றால், மூன்றாம் ஆண்டில் அனுமதிக்க மத்திய அரசு விதிமுறைகளை வகுத்துள்ளது.  

2023-24-ல் தமிழக ஊர்தி பங்கேற்றதால், 2026-ல் தான் மீண்டும் அனுமதி கிடைக்கும். ஆனால், உ.பி. மற்றும் குஜராத்துக்கு தொடர்ந்து மூன்றாவது ஆண்டும் அனுமதி வழங்கப்பட்டதோ, தமிழ்நாட்டுக்கு மட்டும் மறுக்கப்பட்டதோ நியாயமற்ற செயல்.  

மத்திய அரசின் நடவடிக்கைகள் அனைத்துப் மாநிலங்களுக்கும் ஒரே விதமாக அமல்படுத்தப்படவில்லை. அரசியல் நடைமுறையை அறியாமல் எடப்பாடி பழனிச்சாமி உரக்கக் கத்தி, மக்களைத் தவறாக வழிநடத்த முயல்கிறார்.  

அரசுக்கு ஆக்கப்பூர்வமான யோசனைகளை வழங்கி, எதிர்க்கட்சித் தலைவர் பதவியின் மரியாதையை காக்க வேண்டும்" என அமைச்சர் சாமிநாதன் பதிலடி கொடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Minister Saminadhan ADMK EPS


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->