ஸ்டாலின், திருமா, செந்தில் பாலாஜி வரிசையாக வச்சு செய்யும் கிஷோர் கே சாமி.! சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தானாம்... - Seithipunal
Seithipunal


திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்கள் மறைந்த கருணாநிதி மற்றும் தற்போதைய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு க ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்ததாக கிஷோர் கே ஸ்வாமி, ஷிபின், மாரிதாஸ் ஆகியோரை தமிழக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதில், கிஷோர் கே ஸ்வாமி திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே கடந்த வாரம் கிஷோர் கே ஸ்வாமி மீது தமிழக அரசு போட்டிருந்த குண்டர் தடுப்பு சட்டம் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. மேலும், யூடியூபர் மாரிதாஸ் மீது போடப்பட்டிருந்த வழக்குகளும் ரத்து செய்யப்பட்டது.

இதனையடுத்து ஒரே நாளில் கிஷோர் கே ஸ்வாமி மற்றும் மாரிதாஸ் அடுத்தடுத்து விடுதலையாகி வெளியே வந்தனர். இதனை பாஜக தொண்டர்கள் மற்றும் இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் கொண்டாடினர்.

இந்நிலையில், நேற்று முதல் கிஷோர் கே சாமி சமூகவலைத்தள பக்கம் மூலம் மீண்டும் திமுக தலைவர் உள்ளிட்டவர்களை வரிசையாக விமர்சனம் செய்ய தொடங்கிவிட்டார்.

அவரின் முதல் பதிவே 'கோமாளி தர்பார்' என்று காட்டமாக இருந்ததை கண்ட நெட்டிசன்கள்... ஆகா.. சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த கதையாகி விட்டதே., என்று பேச தொடங்கியுள்ளனர். கிஷோர் கே சாமியின் பதிவுகள் பின்வருமாறு.,

"ஜெயில் கம்பிகள் வழியே வெளியே வரக்கூடிய நிலையில் உள்ள என் மீது குண்டாஸ் போட்டு அழகு பார்த்த , கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத திராணியற்ற முதுகெலும்பில்லாத மு க ஸ்டாலின் தலைமையிலான கோமாளிகள் தர்பாருக்கு வணக்கமுங்க"

"இந்த தலைமுறைக்கு உங்களை விட்டால் வேறு யாரும் இல்லை ~ நெல்லை கண்ணன் உருக்கம் !"

"அப்படி இறந்தால் திருமாவின் மடியில் தானே இறக்க போகிறேன் 
என சொல்லிவிட்டு வந்தேன்.! ~ இந்த திடீர் பாச பையித்தியம் வேற.."


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kishor k swamy twit dec


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->