சாம்பியன்ஸ் கோப்பை ஜெர்சி விவகாரத்தத்தில், ஐ.சி.சி. விதிமுறையை இந்தியா பின்பற்றும் - பி.சி.சி.ஐ. செயலாளர் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


 ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 19-ந்தேதி பாகிஸ்தானின் கராச்சி நகரில் தொடங்குகிறது. இதில் 08 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானுக்கு செல்லமறுப்பு தெரிவித்தது. இதனை தொடர்ந்து,  இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடத்தப்படவுள்ளது..

இந்த நிலையில் போட்டியை நடத்தும் பாகிஸ்தான் பெயர் பொறிக்கப்பட்ட லோகோவுடன் கூடிய ஜெர்சிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ) மறுப்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால், இந்த தகவலை பி.சி.சி.ஐ. மறுத்துள்ளது. 

இது குறித்து பி.சி.சி.ஐ. புதிய செயலாளர் தேவஜித் சைகியா கூறுகையில், "சாம்பியன்ஸ் டிராபி தொடரில், ஜெர்சி தொடர்பாக ஐ.சி.சி. எத்தகைய விதியை கொண்டு வருகிறதோ அதை நாங்களும் பின்பற்றுவோம்.

அத்துடன், லோகோ மற்றும் ஜெர்சி விவகாரத்தில் மற்ற அணிகள் எதை செய்கிறதோ அதையே நாங்களும் கடைபிடிப்போம்" என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In the Champions Trophy jersey issue the ICC India will follow the rules


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->