19 வயதுக்குட்பட்ட ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை; ஹாட்ரிக் வெற்றி பெற்ற இந்திய அணி.. ..!
Under19 Junior Womens T20 World Cup Indian team wins hat rick
19 வயதுக்கு உட்பட்டோருக்கான, 02-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்திய அணி தனது 03-வது லீக் ஆட்டத்தில் இலங்கையுடன் மோதியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 09 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் எடுத்தது. அணியின் தொடக்க வீராங்கனை திரிஷா 49 ரன்கள் எடுத்தார்.
119 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 58 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வெற்றி பெற்ற இந்தியா இந்த தொடரில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்திய அணி ஏற்கனவே மலேசியா மற்றும் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது. போட்டியின் ஆட்ட நாயகியாக திரிஷா தேர்வு செய்யப்பட்டார்.
English Summary
Under19 Junior Womens T20 World Cup Indian team wins hat rick