தொடர்ந்து குறையும் தங்கம் விலை - சவரனுக்கு எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


நேற்று முன்தினம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. 

இந்த வரி குறைப்பினால், தங்கம் விலை கடந்த இரண்டு தினங்களாக குறைந்த நிலையில் மூன்றாவது நாளாக இன்றும் விலை குறைந்தது. நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.51,920-க்கும் கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ6,490-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.51,440-க்கும் கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ6,430-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதாவது, வெள்ளி கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 89 ரூபாய்க்கும் கிலோவுக்கு ரூ.3000 குறைந்து பார் வெள்ளி ரூ.89ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

மத்திய அரசு தங்கம் மீதான சுங்க வரியைக் குறைத்தப் பிறகு தங்கம் விலை கடந்த 3 நாட்களில் சவரனுக்கு ரூ.3160 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

25 07 2024 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->