10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வியட்நாமில் கடும் புயல்!....இதுவரை 4 பேர் பலி! - Seithipunal
Seithipunal


கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான சூறாவளி புயல் வியட்நாமை தாக்கி உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக வியட்நாம் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்த போது, யாகி புயல் பாதிப்பால் நாட்டில் 4 பேர் பலியானதாகவும், 78 பேர் காயமடைந்ததாகவும் வியட்நாம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த 10 ஆண்டுகளில் இந்த பிராந்தியத்தை தாக்கிய மிகவும் சக்திவாய்ந்த சூறாவளி புயல் இது என்று கூறினார்.

இதற்கிடையே யாகி புயல் சீனாவின் தென்பகுதியை தாக்கியதன் காரணமாக அந்நாட்டில் 3 பேர் பலியான நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மேலும் யாகி புயல் காரணமாக வியட்நாம் அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.

குறிப்பாக வெள்ளம் அல்லது நிலச்சரிவுகளால் பாதிக்கப்படக்கூடிய பொதுமக்களை வெளியேற்றினர். இருந்த போதிலும் இந்த புயலால் 4 பேர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து வியட்நாம் தலைநகர் ஹனோய் மற்றும் ஹைபோங் நகரம் உள்ளிட்ட4 இடங்களில் உள்ள விமான நிலையங்களும் யாகி புயலால் மூடப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Long more than 10 years Vietnam heavy storm still now 4 dead


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->