தமிழகத்தில் ஒரே நாளில் அதிரவைக்கும் 3 சம்பவங்கள்! கொலை முயற்சி, தாக்குதல், அரிவாள் வெட்டு! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்விரோதம் காரணமாக அரிவாளுடன் ஒரு குடும்பத்தையே இளைஞர் கலைச்செல்வன் என்பவர் வெறிபிடித்த மிருகம் போல் விரட்டிய சம்பவம் காண்போரை பதறவைக்கும் வகையில் இருந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள கலைச்செல்வன் என்பவரை தேடி வருகின்றனர்.

 

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் ஒரு இளைஞரை, 3 பேர் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் தகராறு ஏற்பட்டதாகவும், படுகாயம் அடைந்த இளைஞர் ஆரோக்கியசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்தும்  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தஞ்சையில் பட்டப்பகலில் சட்டக் கல்லூரி மாணவர் மீது அரிவாளால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆத்துப்பாலம் பகுதியில் பெட்ரோல் பங்கில் இன்று காலை பாலசுப்பிரமணியம் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்ப வந்துள்ளார்.

அப்போது பணியில் இருந்த பெண் ஊழியர் பாலசுப்பிரமணியினை வரிசையில் வரும் படி அறிவுறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே  ஏற்பட்ட வாக்குவாதத்தில் பாலசுப்ரமணியம் அந்த பெண் ஊழியரை ஆபாசமான வார்த்தைகளால் தகாத முறையில் திட்டி உள்ளதாக தெரிகிறது.

இதனை எடுத்து அந்த பெண் ஊழியர் தனது உறவினர்களுக்கும், பாலசுப்ரமணியனின் சட்டக் கல்லூரி மாணவனான மகனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில், சட்டக் கல்லூரி மாணவர் ஹரிஹரனுக்கு முதுகில் வெட்டு விழுந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul Tenkasi Attack TNPolice case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->