அதானி விவகாரம் | சீலிடப்பட்ட உரையில் மத்திய அரசு கொடுத்த ரகசிய ஆலோசானை - உச்சநீதிமன்றம் நிராகரிப்பு! - Seithipunal
Seithipunal


அதானி விவகாரத்தில், சீலிடப்பட்ட உரையில் மத்திய அரசு கொடுத்த ரகசிய ஆலோசானையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த 'ஹிண்டன்பர்க்' என்ற நிறுவனம் அதானி குழுமம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கை உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.

குறுகிய காலத்தில் உலக பணக்காரரர்கள் பட்டியலில் சரசரவென முன்னேறிய அதானி, 'ஹிண்டன்பர்க்' அறிக்கைக்கு பின் அதே வேகத்தில் சரிந்தார்.

அதானி குழும பங்குகளின் தொடர் வீழ்ச்சியின் காரணம், ஹிண்டன்பர்க்அறிக்கை குறித்தான உண்மையை வெளியே கொண்டு வர வேண்டும் என்று, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு விசாரணையின்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அதானி குழுமம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் ஆலோசனைகளும் சீலிட்ட உரையில் நீதிமன்றத்தில் மத்திய அரசு சமர்ப்பிக்க தயாராக உள்ளது என்றார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் கொஞ்சம் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும். முதலீட்டாளர்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. விசாரணை குழுவை நாங்களே ஏற்படுத்திக் கொள்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Adani Issue Central Govt SC


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->