மாதம் ₹5,000 சம்பளம் பெறும் வாட்ச்மேனுக்கு ₹2.2 கோடி வருமான வரியா! அதிரவைத்த சம்பவம்!
Crime Income tax Department GST Fraud
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த முட்டை விற்கும் தள்ளுவண்டி வியாபாரிக்கு கடந்த வாரம் கோடிக்கணக்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
அதுபோல், உத்தரப் பிரதேச ஜூஸ் கடை வியாபாரிக்கும் மேற்கோள் பண பரிமாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
இந்த நிலையில், உத்தரப் பிரதேசம் அலிகரில் மாதம் ₹5,000 ஊதியம் பெறும் பாதுகாவலர் ராஜ்குமார் சிங்கிற்கு ₹2.2 கோடி வருமான வரி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதைக் கண்ட அவர் அதிர்ச்சியடைந்ததோடு, "என் சம்பளத்திலே என் குடும்பம் நடத்தவே முடியவில்லை. இதற்கு வரி செலுத்த முடியுமா?" என வேதனை தெரிவித்துள்ளார்.
அவரது பெயரில் உள்ள பான் கார்டை யாரோ மோசடி நோக்கில் பயன்படுத்தியிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிப்பதாக கூறியுள்ளனர். சம்பந்தப்பட்ட பணப் பரிமாற்றங்களை வைத்து விரிவான விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Crime Income tax Department GST Fraud