ஊழியர்களை சங்கிலியால் கட்டிப்போட்ட தனியார் நிறுவனம் - நடந்தது என்ன? தீவிர விசாரணையில் போலீசார்..!!
police investigation private company chained employees in kerala
கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சியில் ஒரு தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களை சங்கிலியால் கட்டிவைத்து நாய்களைப் போல் மண்டியிட்டு நடக்கவும், தரையில் இருந்து நாணயங்களை நக்கவும் வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் டார்கெட் முடிக்காத ஊழியர்களை சங்கிலியால் கட்டி வைத்து நாய்கள் போல் மண்டியிட வைத்து கொடூர தண்டனை கொடுக்கப்பட்டதாக அந்நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர்கள் தெரிவித்தனர்.

அதுமட்டுமல்லாமல், இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், விசாரணை நடத்த மாநில தொழிலாளர் துறை உத்தரவிட்டுள்ளது.
ஆனால், இதுவரைக்கும் இந்த விவகாரம் தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை.
இருப்பினும் இந்தச் சம்பவம் தொடர்பாக , விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று போலீசார் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஊழியர்களை சங்கிலியால் கட்டிப்போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
police investigation private company chained employees in kerala