பங்குசந்தையில் முதலீடு பண்ண போறீங்களா? அப்போ இந்த 3 ஸ்டார்களை ஃபாலோ செஞ்சிடுங்க.! - Seithipunal
Seithipunal


பங்குச்சந்தைகளின் மும்மூர்த்திகள் என அழைக்கப்படும் ராகேஷ் ஜூன் வாலா அவரது மனைவி ரேகா ஜூன் வாலா, மல்டி பேக்கர் ஆஷிஷ் கச்சோலியா மற்றும் முகுல் அகர்வால் ஆகியோர் எந்த பங்குகளில் முதலீடு செய்தாலும் அந்தப் பங்குகள் அள்ளிக் கொடுக்கும் என்பது பங்குச்சந்தையில் எழுதப்படாத விதியாகும். இவர்கள் முதலீடு செய்திருக்கும் கம்பெனிகளில் நான் முதலீடு செய்த கம்பெனிகளும்  இருந்தால் நிச்சயமாக நமக்கு அது லாபம் தான்.

தற்போது நான்காம் காலாண்டை கணக்கீடு செய்து இவர்கள் ஒரு பங்கில்  முதலீடு செய்துள்ளனர். நேற்று பங்குச்சந்தையின் முடிவில் பெரும்பாலான பங்குகள் சரிவிலிருந்த போதும் இவர்கள் முதலீடு செய்திருந்த பங்கு ஏற்றத்துடன் முடிவடைந்து இருக்கிறது. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பங்குச்சந்தையின் மும்மூர்த்திகளாக விளங்கும் இவர்களின் கணிப்புகள் மற்றும் பங்கு வர்த்தகத்தை பொறுத்துதான் ஒரு பங்கின் விலை ஏற்ற இறக்கம் மற்றும் மக்கள் அந்த பங்கினை வாங்குவது போன்ற செயல்கள் பங்குச்சந்தையில் தீர்மானிக்கப்படுகிறது. இதன் காரணமாக பெரும்பாலும் பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்கள்  இந்த மும்மூர்த்திகளை பின்பற்றிய  தங்களுடைய பங்கு வர்த்தகத்தை அமைத்துக் கொள்கின்றனர்.

பங்கு வர்த்தகம் துவங்குவதற்கு முன்னர்  இவர்களின் போர்ட்ஃபோலியோவில்  என்னென்ன நிறுவனங்கள் இருக்கின்றன என்று மற்ற பங்கு  தரகர்களும்  பங்குச்சந்தை வியாபாரிகளும் பார்த்து செல்கின்றனர். அதன் அடிப்படையில் தங்களது முதலீடுகளையும் பங்குகள் விற்பதையும் அமைத்துக் கொள்கின்றனர். மேலும் பங்குச்சந்தையின் விலை ஏற்றம் இறக்கமும்  இவர்கள் போர்ட்ஃபோலியோவில்  உள்ள கம்பெனிகளின் அடிப்படையிலேயே நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

follow the trinity of the stock market the luckwill follow you


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->