மணமகன் இல்லா திருமண ஊர்வலம் போன்றது பா.ஜ.க.வின் தேர்தல் பிரசாரம்: ஆம் ஆத்மி கடும் தாக்கு!
BJP s election campaign is like a wedding procession without a bridegroom: AAP
பா.ஜ.க.வில் உட்கட்சி பூசலால், முதல்-மந்திரி வேட்பாளராக யாரும் அறிவிக்கப்படவில்லை என்றும் பா.ஜ.க.வின் தேர்தல் பிரசாரம் ஆனது, ஒரு மணமகன் இல்லாமல் திருமண ஊர்வலம் போவது போன்றது என ஆம் ஆத்மி தேசிய செய்தி தொடர்பாளர் மீனாட்சி சர்மா கூறியுள்ளார்
தலைநகர் டெல்லியில் தற்போது ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் முதல்-மந்திரியாக அதிஷி செயல்பட்டு வருகிறார்.இந்தநிலையில் 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 5ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.இதற்காக அரசியல் கட்சிகள் தயாராகிவருகின்றனர்.மேலும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் களமிறங்கியுள்ளன. அங்கு தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், டெல்லி போலீசை பாஜக தவறாக பயன்படுத்துவதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், கிழக்கு டெல்லியின் விஷ்வாஸ் நகர் சட்டசபை தொகுதியில் ஆம் ஆத்மி தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றை நடத்தியது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் மீனாட்சி சர்மா கூறும்போது, பா.ஜ.க.வில் உள்ள எந்த தலைவரும் அடிமட்ட அளவில் வேலை பார்க்கவில்லை என்றும்
பா.ஜ.க.வில் உட்கட்சி பூசலால், முதல்-மந்திரி வேட்பாளராக யாரும் அறிவிக்கப்படவில்லை என்றும் பா.ஜ.க.வின் தேர்தல் பிரசாரம் ஆனது, ஒரு மணமகன் இல்லாமல் திருமண ஊர்வலம் போவது போன்றது என விமர்சனம் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கையை பா.ஜ.க. நகலெடுத்து உள்ளது என்றும் அவர் குற்றச்சாட்டாக கூறினார்.
English Summary
BJP s election campaign is like a wedding procession without a bridegroom: AAP