உலக நாடுகளில் முதலிடம் பிடித்த இந்தியா! ஐ.எம்.எஃப் விடுத்த அறிக்கை! - Seithipunal
Seithipunal


வரும் நிதி ஆண்டிலும், உலகில் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா திகழும் என்று, ஐஎம்எஃப் எனப்படும் சர்வதேச நிதியம் அறிவித்துள்ளது.

உலக பொருளாதார ஆய்வு அறிக்கையை ஐஎம்எப் இன்று வெளியிட்டுள்ளது. இதில், இந்திய பொருளாதாரம் வரும் மார்ச் உடன் முடியும் நிதியாண்டில், 6.8 விழுக்காடு வளர்ச்சி காணும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டில் இது ஆறு புள்ளி ஒன்று விழுக்காடாக குறையும் என்றும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக சீனா 5.2 விழுக்காடு வளர்ச்சியை பதிவு செய்யும் என்றும் ஐஎம்எஃப் அறிக்கை தெரிவித்துள்ளது.

மூன்றாவதாக அமெரிக்காவின் வளர்ச்சி ஒன்று புள்ளி நான்கு விழுக்காடாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான், ரஷ்யா, பிரான்ஸ், இத்தாலி, சவுதி அரேபியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் இடம்பெடுத்துள்ளன.

நடப்பு நிதியாண்டி பொறுத்தவரை உலகின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் 2.9% என்றும், இது வரும் நிதியாண்டில் 3.1 விழுக்காடாக அதிகரிக்கும் என்றும் ஐஎம்எஃப்  அந்த அறிக்கைகள் தெரிவித்துள்ளது.

மேலும், உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியா நட்சத்திர போல் மின்னுவதாகவும், உலகின் பாதி பொருளாதார வளர்ச்சியை இந்தியாவும், சீன நாடும் வழங்கும் என்றும் ஐஎம்எஃப் தலைமை பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IMF report 2023


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->