சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு ஷாக்..!! - Seithipunal
Seithipunal


ரிசர்வ் வங்கி இருமாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகள் இன்று அறிவிப்பு..!!

இந்திய பங்குச்சந்தையானது இன்று காலை தொடங்கியதில் இருந்து சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. மும்பை சந்தை குறியீடு சென்செக்ஸ் 117.59 புள்ளிகள் குறைந்து 59,572.59 எனவும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டான நிஃப்டி 32.15 புள்ளிகள் குறைந்து 17,524.90 எனவும் வர்த்த முகமாகி வருகிறது. 

கடந்த ஒரு வாரமாக இந்திய பங்குச் சந்தை மந்தமாக இருந்து வரும் நிலையில் இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே 100 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிந்துள்ளது.

இந்த நிலையில் ரிசர்வ் வங்கி அதன் இரு மாத நாணயக் கொள்கையை கூட்டத்தில் முடிவுகளை இன்று அறிவிக்கும் நிலையில் பங்குச் சந்தைகள் சரிவுடன் தொடங்கி இருப்பது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இருப்பினும் லார்சன், பிபிசிஎல், பஜாஜ் ஆட்டோ, எம்எம், சிப்ளா, ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.

ஆனால் கோடக் மகேந்திரா, நெஸ்டிலே, டெக் மகேந்திரா, கோல் இந்தியா, இன்போசிஸ், ஐடிசி, அப்போலோ மருத்துவமனை, மாருதி சுசுகி, டாட்டா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, விப்ரோ, டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் அறிவுடன் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை மேலும் சரிய வாய்ப்புள்ளதாக பொருளாதாரம் நிபுணர்கள் கருதுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian stock market started with decline


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->