நீங்கள் உங்கள் வேலையை இழந்தாலும்.. இனி 'EMI' குறித்த கவலை இல்லை - இருக்கவே இருக்கு 'வேலை இழப்பு காப்பீடு'...!! - Seithipunal
Seithipunal


தனியார் துறையில் பணி  நீக்கம் என்பது எப்போது, யாருக்கு நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. குறிப்பாக கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு பல்வேறு பெரிய, பெரிய நிறுவனங்களும் ஆயிரக் கணக்கில் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றனர். 

இதையடுத்து திடீரென வேலையை விட்டு நீக்கப் பட்டால், கடும் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். வாகனக் கடன், வீட்டுக் கடன், பர்சனல் லோன் போன்ற கடன் சுமைகள் EMI கட்ட முடியாததால் அதிகமாகி விடும். இதை தவிர்க்க நீங்கள் வேலையில் இருக்கும்போதே 'வேலை இழப்புக் காப்பீடு' செய்ய வேண்டும். 

'வேலை இழப்புக் காப்பீடு'  எனபதும் ஆயுள் காப்பீட்டின் கூடுதல் அம்சம் தான். சில காப்பீட்டு நிறுவனங்கள், ஆயுள் காப்ப்பீட்டுடன் சேர்த்து 'வேலை இழப்புக் காப்பீட்டையும்' வழங்குகின்றன. இதன் மூலம் ஒரு 3 முதல் 4 EMI க்களை காப்பீட்டு நிறுவனமே உங்களுக்காக செலுத்திவிடும். 

முக்கிய குறிப்புகள் :

* பாலிசியை வாங்கிய 5 ஆண்டுகளுக்கு தான் வேலை இழப்பு கவரேஜ் உங்களுக்குக் கிடைக்கும். அதற்குப் பிறகு EMI யை காப்பீட்டு நிறுவனம் செலுத்தாது. 

* இது ஒரு தற்காலிக EMI செலுத்தும் வசதி தான். நிரந்தர வசதி இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

* வேலை இழப்புக் காப்பீடு அனைவருக்கும் கிடைப்பதில்லை. முழுநேர ஊழியர்கள் மட்டுமே இதற்குத் தகுதியானவர்கள். 

* வேலையற்றவர்களோ, தற்காலிகப் பணியாளர்களோ, சுயதொழில் செய்பவர்களோ, ஓய்வு பெற்றவர்களோ இந்த காப்பீட்டை பெற முடியாது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Job Loss Insurance Will Cover Your Personal and Home Loans


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->