கல்லூரி மாணவி விடுதி கட்டிடத்தில் இருந்து விழுந்து பலி..போலீஸ் விசாரணை!  - Seithipunal
Seithipunal


சிக்கிமில் பாக்யாங் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவி ஒருவர் விடுதியின் 8-வது தளத்தில் இருந்து கீழே விழுந்து பலியானார்.கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம், இதே விடுதியின் 7-வது தளத்தில் இருந்து கீழே விழுந்து மாணவி பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அசாமை சேர்ந்தவரான கல்லூரி மாணவி ஒருவர் சிக்கிமின் பாக்யாங் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.டெக் படிப்பை படித்துவந்தார்,அந்த மாணவி  கல்லூரி விடுதியில் தங்கி இருந்து படிப்பை தொடர்த்துவந்தாள்.

இந்நிலையில், விடுதியின் 8-வது தளத்தில் இருந்து கீழே விழுந்ததில் அந்த கல்லூரி மாணவி பலியானார் என போலீசார் நேற்று தெரிவித்தனர். இதையடுத்து இதுபற்றி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர் . அந்த கல்லூரி மாணவி மரணம் அடைந்ததற்கான சூழ்நிலை பற்றி தெளிவாக தெரியவில்லை என்றும்  உண்மையை உறுதி செய்ய விசாரிக்கப்பட்டு வருகிறது என போலீசார் தெரிவித்துஉள்ளனர்.

மேலும் விசாரணையில் அசாமை சேர்ந்தவரான அந்த மாணவி விடுதி கட்டிடத்தில் இருந்து, தவறி விழுந்து விட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இதே கல்லூரி கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம், இதே விடுதியின் 7-வது தளத்தில் இருந்து கீழே விழுந்து மாணவி பலியானார். இந்நிலையில், ஓராண்டிற்குள் மற்றொரு மாணவி மரணம் அடைந்துள்ளது சிக்கிமில் பாக்யாங் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

College student falls to death from hostel building Police investigation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->