விண்கலத்திற்கு கல்பனா சாவ்லாவின் பெயரினை சூட்டி மகிழ்வித்த அமெரிக்கா..!! - Seithipunal
Seithipunal


விண்வெளிக்கு முதன் முதலாக பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் என்கிற சிறப்பு அந்தஸ்தினை இந்தியாவிற்கும், பெண் இனத்திற்கும் பெருமையாக சேர்த்தவர் கல்பனா சாவ்லா. இவர் இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் இருக்கும் கர்னல் ஊரில், கடந்த மார்ச் 17 ஆம் தேதி 1962 ஆம் வருடத்தில் பிறந்தார். இவரது பெற்றோர்கள் பனாரஸ் லால் சாவ்லா - சன்யோகி தேவி ஆவர்.

கல்பனா சாவ்லா விமானியாக மட்டுமல்லாது, வானூர்தி மற்றும் விமானம் தாங்கி கப்பல்களுக்கு பயிற்சியாளராகவும் தகுதி அடைந்தவர். அமெரிக்க நாட்டின் விமானம் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் ஆசிரியராகவும், ஆராய்ச்சியாளராகவும் விளங்கிய நிலையில், ஜின் பியர் ஹாரிசனை 1983 ஆம் வருடத்தில் திருமணம் செய்தார். 

அமெரிக்காவின் குடியுரிமை கிடைத்த பின்னர், நாசாவில் நடைபெற்ற நேர்முக தேர்வில் தேர்வாகி, கடந்த 1995 ஆம் வருடத்தில் விண்வெளி வீரர் பயிற்சி குழுவில் இணைந்தார். பின்னர் கொலம்பியா விண்வெளி ஊர்தியில் பயணித்த வீரர்களுள் ஒருவராக இருந்த நிலையில், விண்வெளியில் 10.67 மில்லியன் கிலோமீட்டர் தூரமும் பயணம் செய்தார். 

சுமார் 252 நாட்கள் விண்வெளியில் சுற்றி வந்த நிலையில், கடந்த 2013 ஆம் வருடத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 7 பேர் பலியான நிலையில், இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவர்களின் மறைவிற்கு உலகளவில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கல்பனாவிற்கு அமெரிக்க காங்கிரஸ் விண்வெளி பதக்கமும், நாசாவின் விண்ணோட்ட பதக்கமும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்க விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான " நார்த்தரோப் க்ராம்மன் " வர்த்தக ரீதியிலான விண்கலத்திற்கு கல்பனா சாவ்லாவின் பெயரை சூட்டியுள்ளது. விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை ஏற்றி செல்லும் இந்த விண்கலத்திற்கு " எஸ்.எஸ்.கல்பனா சாவ்லா " என்ற பெயரையும் சூட்டியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kalpana Chawla America Aerospace Satellite Name


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->