ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட மணமகன்...!!! காரணம் என்ன?
Groom commits suicide by jumping front train
உத்தர பிரதேசம், ரேபரெலி மாவட்டம் சலோன் பகுதியை சேர்ந்தவர் 30 வயதான 'ரவி' என்பவர் . இவருக்கும் திருமணம் இன்று நடைபெறவிருந்தது.

மேலும், அமேதி மாவட்டம் அசம்கர் பகுதியில் திருமண ஏற்பாடுகள் உறவினர்களால் செய்யப்பட்டு வந்தது.இந்த நிலையில் மணமகன் ரவி, திருமணத்திற்கு சில மணிநேரம் முன்பு நேற்று இரவு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
மேலும், பனி ரெயில் நிலையம் அருகே சென்ற ரவி, லக்னோ மற்றும் வாரணாசி இடையேயான ரெயில்பாதியில், அங்கு வந்த சரக்கு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவலர்கள், ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், மணமகன் ரவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
English Summary
Groom commits suicide by jumping front train