தமிழகத்தில் தாமரை மலரும்... அதுவும் இரட்டை இலைக்கு மேல் - நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேச்சு..!!
nainar nagendran speech about admk and bjp alaince
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தற்போதே தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்தக் கூட்டணியை சமீபத்தில் சென்னை வந்த பா.ஜ.க. மூத்த தலைவர் அமித்ஷா உறுதி செய்தார்.
இந்த நிலையில், தமிழகத்தில் இரட்டை இலைக்கு மேலே தாமரை மலரும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அதாவது, சேலத்தில் நடைபெற்ற பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய நயினார் நாகேந்திரன் தெரிவித்ததாவது:-

"பாஜக தலைமை சொல்வதை அனைவரும் கேட்க வேண்டும். கூட்டணி குறித்து ஒருவருக்கொருவர் விமர்சனம் செய்தால், அது வேறு விதமாக போய்விடும். நமது கூட்டணி உறுதியான கூட்டணி, இறுதியான கூட்டணி. தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும். இரட்டை இலைக்கு மேலே தாமரை மலரும். இந்த கூட்டணி சாதாரண கூட்டணி அல்ல. வெற்றி கூட்டணி.
நமது கூட்டணியை முதலமைச்சர் சந்தர்ப்பவாத கூட்டணி என்று கூறியுள்ளார். நான் சொல்லுகிறேன். அவர்தான் சந்தர்ப்பவாத கூட்டணிக்கு தலைமையேற்றிருக்கிறார். நமது கூட்டணிதான் நியாயமான கூட்டணி, நேர்மையான கூட்டணி, ஊழல் இல்லாத கூட்டணி. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி வருவதற்கு அனைவரும் பாடுபட வேண்டும்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
nainar nagendran speech about admk and bjp alaince