மக்களே உஷார்; ஏப்ரல் 17 வரை மழையும் பெய்யும், வெயிலும் சதத்தை தொடும்; வானிலை மையம் அறிவிப்பு..!
Moderate rains are likely in Tamil Nadu till April 17 Meteorological Department announcement
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்துள்ளது. இதனால் ஏப்ரல் 17- ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, சென்னை கத்திவாக்கத்தில், 06 செ.மீ., எண்ணுாரில், 04 செ.மீ., மழை பெய்துள்ளது. அத்துடன், கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர், வேலுார் ஆகிய இடங்களில் தலா,0 3 செ.மீ., மழை பெய்துள்ளது.

மேலும், சென்னை மாதவரம், அம்பத்துார், மணலி புதுநகர், திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, வேலுார் மாவட்டம் காட்பாடி, கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல் ஆகிய இடங்களில் தலா, 02 செ.மீ., மழை பெய்துள்ளது.
இதனை தொடர்ந்து, மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய, காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை நிலவரப்படி வலுவிழந்தது. இருப்பினும் அதே மத்திய மேற்கு வங்கக்கடலில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனால், இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், ஏப்ரல் 17-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், ஒரு சில இடங்களில் இயல்பை விட 03 டிகிரி செல்ஷியஸ் அதிகபட்ச வெப்ப நிலை பதிவாகக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படுவதோடு, ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Moderate rains are likely in Tamil Nadu till April 17 Meteorological Department announcement