மாருதி சுசுகி புதிய ஆல்டோ K10 - விலை இவ்வளவுதானா.!
Maruti Suzuki New Alto K10
மாருதி சுசுகி நிறுவனம் அதன் புதிய ஆல்டோ K10 மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
விலை விபரங்கள்:
புதிய ஆல்டோ K10 மாடலின் துவக்க விலை -ரூ. 3 லட்சத்து 99 ஆயிரம் என எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இந்த காரின் டாப் எண்ட் மாடலின் விலை ரூ. 5 லட்சத்து 83 ஆயிரத்து 500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த காருக்கான எண்ட்ரி லெவல் மாடலுக்கு முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. இதற்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் ஆகும்.
இதன் சிறப்பு அம்சங்கள்:
• இந்த காரில் முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள் மற்றும் ஸ்வெப்ட்பேக் ஹாலோஜன் ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளது.
• சிங்கில் பீஸ் கிரில், பிளாக் ஸ்டீல் வீல்கள் மற்றும் சதுரங்க வடிவம் கொண்ட டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளது.
• இத்துடன், இண்டகிரேட் செய்யப்பட்ட ஸ்பாயிலர்கள், ஹை மவுண்ட் செய்யப்பட்ட ஸ்டாப் லேம்ப் மற்றும் ஃபெண்டரில் டர்ன் இண்டிகேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.
• புதிய மாருதி சுசுகி ஆல்டோ K10 மாடலின் உள்புறம் பிளாக் நிற இண்டீரியர் செய்யப்பட்டு சில்வர் அக்செண்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.
• இத்துடன் ஏழு இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.
• மேலும், ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளது.
• இந்த கார் சாலிட் வைட், சில்கி சில்வர், கிராணைட் கிரே, சிஸ்லிங் ரெட், ஸ்பீடி புளூ மற்றும் எர்த் கோல்டு என ஆறு விதமான நிறங்களில் கிடைக்கிறது.
• இந்த புதிய மாருதி சுசுகி ஆல்டோ K10 மாடலில் 1.0 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
• இந்த என்ஜின் அதிகபட்சமாக 66 ஹெச்பி பவர் மற்றும் 89 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
English Summary
Maruti Suzuki New Alto K10