2 நாளா பொய் பேசிட்டு இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி! ஆதாரத்துடன் வெளுத்துவங்கும் அண்ணாமலை! - Seithipunal
Seithipunal


பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "கடந்த 19.12.2024 அன்று, பள்ளிக்கல்வித்துறையின் தொழிற்கல்வி இணை இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் எழுதிய கடிதத்தில், BSNL நிறுவனத்திற்குச் செலுத்தப்படவேண்டிய நிலுவைத் தொகையான 1.5 கோடி ரூபாயை உடனடியாக செலுத்துங்கள் என்றும், இல்லையெனில் சேவை துண்டிக்கப்படும் என்று BSNL நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளுக்கான இணையதள சேவைக்கான கட்டணம் நிலுவையில் இருப்பதைச் சுட்டிக் காட்டியதும், கடந்த இரண்டு நாட்களாக, நிலுவை இல்லை என்று கூறிக் கொண்டிருந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், கட்டண நிலுவை இருப்பதை ஆதாரத்துடன் நிரூபித்த பின்னர், அவசர அவசரமாக, நிலுவையில் உள்ள மொத்தத் தொகையையும் வழங்கிடப் பள்ளிக் கல்வித்துறை மூலம் இன்று ஆணை பிறப்பித்துள்ளார். 

அமைச்சருக்குத் தனது துறை சார்ந்த பணிகள் குறித்த விவரங்கள் தெரியவில்லையா அல்லது வேண்டுமென்றே இரண்டு நாட்களாகப் பொய் கூறி வந்தாரா? 

நாட்டின் வருங்காலமான மாணவ சமுதாயத்துக்குப் பொறுப்பான துறை என்பதை நினைவு வைத்திருந்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செயல்பட வேண்டும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Annamalai Condemn to DMK Minister Anbil makesh


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->