சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படுவதால், மக்கள் பாஜகவை தோற்கடித்தனர் - முக ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


சிறுபான்மையினருக்கு எதிரான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.

திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் இன்று (டிச. 23) சென்னை பெரம்பூரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது,

"திராவிட மாடல் சமத்துவத்தை போற்றுவதாகும். திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு இதுவே பதில். எந்த மதமாக இருந்தாலும் அன்பையும் சகோதரத்துவத்தையும் போதிக்க வேண்டும். இறைவனை வேண்டுவது அவரவர் விருப்பம்; எதிலும் பாகுபாடு காட்டக் கூடாது.  

தமிழகத்தில் 37 தேவாலயங்களை புனரமைக்க ரூ. 1.63 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஜெருசலேம் புனித பயணம் செல்வோருக்கு ரூ. 37,000 நிதி வழங்கப்படுகிறது.  

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நின்றது திமுக; ஆதரவு தெரிவித்தது அதிமுக. மத்திய அரசு

சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படுவதால், மக்கள் பாஜகவை தோற்கடித்தனர். மக்கள் நல திட்டங்கள் நிறைவேற்றுவதால் திமுக அரசு நம்பிக்கையுடன் திகழ்கிறது," என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MK Stalin BJP Govt


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->