இபிஎஸ் தலைமையில் இருப்பது தான் அதிமுக - சி.வி. சண்முகம்.! - Seithipunal
Seithipunal


இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரிய மூர்த்தி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது எட்டு வாரத்தில் முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதை அடுத்து இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆஜராகி விளக்கம் தர தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதன் படி எடப்பாடி பழனிசாமி தரப்பில் சி.வி.சண்முகம் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இன்று நடைபெற்ற தேர்தல் ஆணையத்தின் விசாரணையில், மனு தாரர்கள், எதிர் மனு தாரர்கள், அவர்களுடைய பதில், ஆட்சேபனைகள் இருந்தால் அனைத்தையும் வரும் 30ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

அதற்கு ஏதாவது ஆட்சேபனைகள் இருந்தால் அடுத்த மாதம் 13ம் தேதிக்குள் ஆட்சேபனைகள் தெரிவித்த பிறகு இதுகுறித்து விசாரிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சூரிய மூர்த்தியின் மனுவின் மீது இன்று விசாரணைக்கு வந்தபோது தேர்தல் ஆணையத்தில், எதிர் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவின் நகல் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். 

அதற்கு கால அவகாசமும் கோரப்பட்டுள்ளது. அதிமுகவில் பிரிவு எதுவும் கிடையாது. இபிஎஸ் தலைமையில் இருப்பதுதான் அதிமுக என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cv sanmugam apear two leaf case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->