தமிழக பள்ளிகளில் தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் அன்பில் மகேஷ்! - Seithipunal
Seithipunal


5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களை தோல்வியடைய (Exam Fail) விடக்கூடாது என்ற கொள்கை ரத்து செய்யப்படும் என மத்திய கல்வித் துறைச் செயலாளர் சஞ்சய் குமார் அறிவித்துள்ளார்.  

அதில், 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களை ஃபெயில் செய்யக் கூடாது என்ற கொள்கை ரத்து செய்யப்படுகிறது. தோல்வியடைந்த மாணவர்களுக்கு இரண்டு மாதங்களுக்குள் மறு தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும். அதிலும் தோல்வியடைந்தால், அடுத்த வகுப்புக்கு முன்னேற்றம் செய்யப்பட மாட்டார்கள். இது குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட முடிவாகும்" என்று மத்திய கல்வித் துறைச் செயலாளர் சஞ்சய் குமார் அறிவித்துள்ளார்.  

இந்த அறிவிப்பு தமிழகத்தில் தேர்ச்சி முறையால் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் 8 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இது தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் இதுகுறித்து விளக்கம் அளித்து உள்ளார்.

அதில், "தமிழக பள்ளிகளில் தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் இல்லை. தற்போதைய தேர்ச்சி முறை தொடரும். மாணவர்களின் மகிழ்ச்சி, பாதுகாப்புடன் கல்வி கற்கும் சூழலை உறுதிசெய்வதே முக்கியம்.  

எளிய குடும்பங்களில் இருந்து வரும் குழந்தைகள் தடையின்றி கல்வி பெறுவதில் மத்திய அரசு முக்கிய தடை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மத்திய அரசின் கல்வி உரிமை சட்ட விதிகளில் இருந்து விலகியுள்ளன. எனவே, மாணவர்கள், பெற்றோர் குழப்பம் அடையத் தேவையில்லை," என்று தெளிவுபடுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anbil Makash say about new education policy


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->