மாருதி சுசுகி புதிய கிராண்ட் விட்டாரா - டொயோட்டா புதிய ஹைரைடர்.! - Seithipunal
Seithipunal


மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் அதன் புதிய கிராண்ட் விட்டாரா மாடலை இந்த மாத துவக்கத்தில் அறிமுகப்படுத்தியது. இதனை தொடர்ந்து நாடு முழுவதும் இயங்கி வரும் நெக்சா விற்பனை மையங்களில் இந்த மாடல் வரத் தொடங்கி உள்ளது. மேலும், இந்த மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், புதிய கிராண்ட் விட்டாரா காரை வாங்க இதுவரை சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்து இருப்பதாக மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த காரின் வினியோகம் செப்டம்பர் மாதத்தில் துவங்கும் என எதிர்பார்க்கலாம். 

டொயோட்டா நிறுவனம் கிராண்ட் விட்டாரா காரின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட மாடலாக அர்பன் குரூயிசர் காரை இந்த மாதம் 16-ஆம் தேதி அறிமுகம் செய்ய இருந்த நிலையில் தற்போது இந்த காரின் அறிவிப்பு தேதி மாற்றப்பட்டுள்ளது.

டொயோட்டா ஹைரைடர் மாடலுக்கான முன்பதிவும் துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் வெளியீட்டை தொடர்ந்து இந்த காரின் வினியோகமும் செப்டம்பர் மாதத்திலேயே துவங்கும் என எதிர்பார்க்கலாம். 

டொயோட்டா நிறுவனம் அதன் புதிய ஹைரைடர் மற்றும் கிராண்ட் விட்டாரா மாடல்களை பெங்களூருவில் உள்ள பிடாடி ஆலையில் உற்பத்தி செய்துள்ளது. இந்த இரு கார்களிலும் 1.5 லிட்டர் பெட்ரோல் மைல்டு ஹைப்ரிட் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் ஸ்டிராங் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maruti Suzuki New Grand Vitara Toyota New Highrider


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->