சிறையில் தொழிலதிபருக்கு சிறப்பு கவனம் - டி.ஐ.ஜி உள்பட 2 பேர் சஸ்பெண்ட்.!
two police officers suspend for help to businessman babi semmanur in kerala jail
மலையாள பிரபல நடிகை ஹனிரோஸ் எர்ணாகுளம் மத்திய போலீஸ் நிலையத்தில் பாபி செம்மன்னூர் மீது அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபி செம்மன்னூரை கைது செய்து எர்ணாகுளம் ஜூடிசியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவர் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். ஆனால், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன் தொழில் அதிபரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.
இதையடுத்து பாபி செம்மன்னூர் காக்கநாடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு பிரபல தொழில் அதிபர் பாபி செம்மன்னூர் சிறப்பு சலுகைகளை பெற்றதாக புகார் எழுந்தது. இந்தப் புகாரின் படி விசாரணை நடத்தியதில் காக்கநாடு சிறையில் இருந்தபோது, சிறைத்துறை சூப்பிரண்டு அலுவலக அறையில் வைத்து, பாபி செம்மன்னூர் மற்றும் அவரது 3 நண்பர்கள் சூப்பிரண்டை சந்தித்து உள்ளனர். இந்தச் சந்திப்பு சிறைத்துறை பதிவேடுகளில் பதிவு செய்யாமல் நடந்துள்ளது.
அந்தச் சந்திப்பின் போது தொழில் அதிபரை செல்போனில் பேச அனுமதித்தது உள்பட பல்வேறு சலுகைகள் வழங்க டி.ஐ.ஜி. ஏற்பாடு செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. சிறையில் பாபிக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து, பார்வையாளர்களின் நாட்குறிப்பு மற்றும் சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.
சிறையில் பாபியை சந்தித்ததாக ஒப்புக்கொண்ட டி.ஐ.ஜி. அஜயகுமார், தொழிலதிபருக்கு எந்த சிறப்பு கவனம் செலுத்தப்படவில்லை என்று கூறினார். இந்த நிலையில், சிறையில் கைதி பாபிக்கு சிறப்பு கவனம் அளித்ததாக சிறைத்துறை டி.ஐ.ஜி. அஜய்குமார், சிறை சூப்பிரண்டு ராஜு ஆபிரகாம் உள்ளிட்ட இரண்டு பேரையும் பணியிடை நீக்கம் செய்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
English Summary
two police officers suspend for help to businessman babi semmanur in kerala jail