அசத்தலான அப்டேட் கொடுத்த ஹோண்டா.! புத்தம் புதிய ஆக்டிவா எலக்ட்ரிக் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


ஹோண்டா, உலகின் மிகப்பெரிய மோட்டார்சைக்கிள்களின் உற்பத்தியாளர் ஆகும். தற்போது ஹோண்டா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன திட்டமிடல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 2025ஆம் ஆண்டிற்குள் ஆக்டிவா உட்பட பத்து புதிய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய ஹோண்டா முடிவு செய்துள்ளது.

அதன்படி சீனா, ஜப்பான், ஐரோப்பா மற்றும் ஆசியாவில் ஐந்து புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும், இதைத் தொடர்ந்து ஜப்பான், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் நான்கு புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய உள்ளது. 

இதில் புதிய எலெக்ட்ரிக் வாகனங்கள் நியோ-ரெட்ரோ பைக், குரூயிசர் மற்றும் பெரிய மேக்சி ஸ்கூட்டர் வடிவில் உருவாகி இருக்கும் என கூறப்படுகிறது. 

மேலும் 2024-25ல் இரண்டு தனிப்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யவும் ஹோண்டா திட்டமிட்டுள்ளது. இதில் ஒரு மாடல் தோற்றத்தில் ஆக்டிவா மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷன் போன்றும், மற்றொரு ஸ்கூட்டர் இந்திய சந்தையில் இளம் வாடிக்கையாளர்களை குறி வைத்து அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மேலும் தற்போதைய தகவல்களின் படி ஹோண்டா நிறுவனம் எலெக்ட்ரிக் ஆக்டிவா மாடலை அடுத்த ஆண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New Honda activa launched with special updates


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->